பழநி திருஆவினன்குடி கோயிலில் டிச.8ல் கும்பாபிஷேகம்



பழநி: பழநி முருகன் கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் டிச. ல் 8 கும்பாபிஷேகம் நடக்க உள்ளது


பழநி முருகன் கோயில் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில்களுக்கு 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் நடத்த ஆகம விதிகளில் உள்ளது. இதில் பழநி மலை அடிவாரம் திருஆவினன்குடி கோயிலில் 2014 செப்., 7 ல் கும்பாபிஷேகம் நடந்த நிலையில் தற்போது கோயிலின் பழமை தன்மை மாறாமல் தொல்லியல் துறையிடம் முறையான அனுமதி பெற்று கும்பாபிஷேகம் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இப்பணிகள் நிறைவு பெறும் நிலையில் டிச.8 ல் திருஆவினன்குடி குழந்தை வேலாயுத சுவாமி கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதற்கான முகூர்த்த கால் நடும் பணி இன்று அதிகாலை நடைபெறும் என கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்