சஷ்டி விரதம் ; மனமுருகி வழிபட மகத்தான பலனை தருவார் முருகன்!



முருகனை வழிபட உகந்த நாட்களில் சஷ்டி விரதம் முக்கியமானதாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். குழந்தைப்பேறு உண்டாகும். திதிகளில் ஆறாவது திதியாக வருவது ஆறுமுகனுக்கு உகந்த சஷ்டி திதியாகும். சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். சஷ்டிநாளில் முருகனை வழிபட்டால் நவக்கிரகங்கள் மகிழ்ச்சியுடன் நன்மையளிக்கும். வாழ்வில் எல்லா செல்வங்களும் உண்டாகும். மன்மதன் போல அழகுடன் திகழ்வர் என கந்தசஷ்டிகவசம் கூறுகிறது. சஷ்டி விரதமிருப்பவருக்கு குழந்தைப்பேறு உண்டாகும். கணவனும், மனைவியும் சேர்ந்து சஷ்டி விரதமிருக்க, நல்ல குணமுள்ள குழந்தைகள் பிறப்பர். இன்று காலை, மாலை கந்தசஷ்டி கவசம் படிப்பது எல்லா நன்மையும் தரும். இன்று சரவணபவ சொல்லி ஆறுமுகனை ஆராதிப்போம்..! முருகனை வழிபட எதிர்ப்புகள் நீங்கும்.. எதிர்பார்ப்பு யாவும் நடக்கும்.! இன்று கோவிலில் அபிஷேகம் செய்து வழிபட வேண்டுதல் யாவும் நிறைவேற்றி வைப்பார் வேலவன்!


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்