காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் சொர்ணமுகி நதியில் ஆரத்தி வழிபாடு



காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் காளஹஸ்தி சிவன் கோயில் சார்பில் கோயிலின் வேத பண்டிதர்கள் சொர்ணமுகிக்கு நதிக்கு ஆரத்தி வழிபாடு செய்தனர். 


விழாவை முன்னிட்டு, சொர்ணமுகி நதிப் பகுதி முழுவதும் நதி ஆரத்திக்காக மிகவும் அழகாக மின் விளக்குகளால் பக்தர்களை கவரும் வகையில் அலங்கரிக்கப்பட்டுள்ளது. காசியில் உள்ள (தஷா காட் டில்) கங்கை நதி கரையில் ஒவ்வொரு நாளும் நடைபெறும் நதி ஆரத்தியைப் பார்ப்பது போல் தட்சிண ( தென்) காசி என்று அழைக்கப்படும் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வர சுவாமி கோயில் சார்பில் கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, ஸ்ரீகாளஹஸ்தி க்ஷேத்திரத்தில் சொர்ணமுகி ஆரத்தி மிகவும் சிறப்பாக நடத்தப்பட்டது. முன்னதாக கங்கா தேவியின் உற்சவமூர்த்தியை சொர்ணமுகி நதி கரையில் உள்ள சத்வோமுக்தி இடத்திற்கு ஊர்வலமாக கொண்டு வரப்பட்டது. தொடர்ந்து கணபதி பூஜை,  புண்யாவசனம், மற்றும் சாஸ்திர முறைப்படி  கங்கா தேவிக்கு சீர் வரிசை (பொருட்கள்) வழங்கப்பட்டது. பின்னர் சொர்ணமுகி தேவிக்கு (ஒன்பது) ஆரத்திகளை சமர்பித்தனர். ஆகம விதிகளின்படி கங்கை தேவிக்கு பல்வேறு வகையான ஆரத்திகள் தொடர்ச்சியாக வழங்கப்பட்டன. வேத மந்திரங்கள் முழக்கங்களுக்கு இடையில், ஏராளமான பக்தர்கள் ஆற்றில் தீபங்களை ஏற்றி, அம்மனை வழிபட்டு, பிரார்த்தனை செய்தனர். இந்த ஆண்டு மின் விளக்கு அலங்காரம் மிகவும் கண்கவரும் வகையில் இருந்தது. 


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்