கார்த்திகை சோமவாரம்; நத்தம் கைலாசநாதர் கோவிலில் 1008 சங்காபிஷேகம்



நத்தம்; நத்தம் கோவில்பட்டி கைலாசநாதர் கோவிலில் கார்த்திகை மாத 3வது சோமவாரத்தை முன்னிட்டு சங்காபிஷேக விழா நடந்தது. இதையொட்டி கோவில் வளாகத்தில் லிங்க வடிவில் 1008 சங்குகள் அமைக்கப்பட்டு அதில் வில்வ இலைகள், புஷ்பங்களால் அலங்கரிங்கப்பட்டிருந்தது. தொடர்ந்து சிவாச்சாரியார்களின் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடந்தது. பின்னர் மூலவர் கைலாசநாதர்- செண்பகவள்ளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், புஷ்பம், இளநீர், பஞ்சாமிர்தம், உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்களும், தீபாராதனைகளும் நடந்தது.இதில் சுற்றுவட்டாரங்களிலிருந்து ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். இதைப்போலவே குட்டூர்- அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை மாத 3-வது சோம வாரத்தை முன்னிட்டு108 சங்குகள் அமைக்கப்பட்டு சங்காபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மூலவருக்கு 16 வகையான அபிஷேகங்கள் செய்யப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்