வளர்பிறை ஏகாதசி விழா ; பொள்ளாச்சி கோவில்களில் வழிபாடு



பொள்ளாச்சி: பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதியில் உள்ள கோவில்களில், வளர்பிறை ஏகாதசி விழா நடந்தது.

பொள்ளாச்சி அருகே, டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், வளர்பிறை ஏகாதசியையொட்டி காலை, 10:30 மணிக்கு  திவ்ய திருமஞ்சன அபிேஷகம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் தாயாருடன், பெருமாள், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். தொடர்ந்து காலை, 11:00 மணிக்கு விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இதுபோன்று, பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கோவில்களில் வளர்பிறை ஏகாதசியை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.

வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்