பரமக்குடி பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ர தீப விழா



பரமக்குடி; பரமக்குடி, எமனேஸ்வரம் பெருமாள் கோயில்களில் பாஞ்சராத்ர தீப விழாவில் சொக்கப்பனை எரிக்கப்பட்டது.


பரமக்குடி சுந்தரராஜ பெருமாள் கோயிலில் நேற்று இரவு 7:00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் பெருமாள் எழுந்தருளினார். மூலஸ்தான முன் மண்டபத்தில் சிறப்பு ஹோமம் நிறைவடைந்து, அனைத்து சுவாமிகள் முன்பு தீபம் ஏற்றப்பட்டது. பின்னர் 8:30 மணிக்கு பெருமாள் புறப்பாடாகி கோயில் முன்பு சொக்கப்பனை எரிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் ரத வீதிகளில் வலம் வந்த பெருமாள் 10:00 மணிக்கு கோயிலை அடைந்தார்.


*எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் காளிங்க நர்த்தன அலங்காரத்தில் இரவு 8:00 மணிக்கு புறப்பாடாகினர். தொடர்ந்து கோயிலுக்கு முன்பு சிறப்பு பூஜைகள் நிறைவடைந்த சொக்கப்பனை எரிக்கப்பட்டது. அப்போது கோயில் முழுவதும் வண்ண விளக்குகள் அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். 


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்