சின்னமனூரில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா



சின்னமனூர்; சின்னமனூர் ஐயப்பன் பக்த பஜனை சபை சார்பில் ஐயப்பனுக்கு ஆராட்டு விழா நடைபெற்றது.


சின்னமனூரில் ஐயப்பன் மணிமண்டபத்தில் வெளி மாநிலங்களிலிருந்து வரும் பக்தர்கள் தங்கி, ஒய்வெடுத்து செல்ல ஐயப்பா சேவா சங்கம் 50 ஆண்டுகளுக்கு மேலாக சேவை செய்து வருகிறது. மாலை அணிந்து வரும் பக்தர்களுக்கு உணவு வழங்கப்படுகிறது. ஐயப்பன் பக்த பஜனை சபை சார்பில் இன்று காலை ஆராட்டு விழா நடந்தது. முல்லைப்பெரியாற்றில் ஐயப்ப விக்ரகத்திற்கு ஆராட்டு விழா நடைபெற்றது. ஏராளமான பொதுமக்களும், ஐயப்ப பக்தர்களும் பங்கேற்றனர். தொடர்ந்து லெட்சுமிநாராயணா பெருமாள் கோயிலில் உள்ள நெல்லி மரத்திற்கு உலக நன்மை வேண்டி பூஜைகள் நடைபெற்றது. கோயில் வளாகத்தில் நடைபெற்ற அன்னதானத்தில் திரளாக பக்தர்களும், பொதுமக்களும் பங்கேற்றனர். ஐயப்பன் மணிமண்டப தலைவர் பெருமாள், குருசாமி லோகேந்திரராசன் உள்ளிட்ட பஜனை மடத்தின் நிர்வாகிகள் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.


வைகுண்ட ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பது எப்படி?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்