காட்டுமன்னார்கோவில்; ஆதனூர் சௌந்தரநாயகி அம்பா சமேத சிவலோகநாத சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.
காட்டுமன்னார்கோவில் அடுத்துள்ள மா.ஆதனூர் கிராமத்தில் நந்தனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் காஞ்சி சங்கரமடம் சார்பில், நந்தனார் ஆலயம் புதுப்பிக்கும் பணிகள் நடைபெற்று வந்தது. பணிகள் நிறைவடைந்ததை தொடர்ந்து இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. முன்னதாக பல்வேறு யாக பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து இன்று காலை ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தலைமையில் மகா கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.