இன்று திருவோண விரதம்: பெருமாளை வழிபட 7 பிறவிக்கும் 16 வகை செல்வமும் கிடைக்கும்!



மார்கழி திருவோணம் பெருமாளை வழிபட மிக சிறந்த தினமாகும். பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட நிம்மதியான வாழ்வு அமையும். திருப்பங்களை நல்கும் திருவோணத்தில் பெருமாளை வழிபட்டு எல்லா வளங்களும் பெறுவோம். 


ஒவ்வொரு மாதமும் வரும் திருவோணம் பெருமாள் வழிபாட்டிற்கான நாள். பெருமாளின் வாமன அவதாரத்தை போற்றும் நாள் இது. திருவோண நட்சத்திரத்தில் பெருமாளுக்கு விரதமிருந்து வழிபட சந்திர தோஷம் நீங்கும். பெருமாள் மந்திரம், விஷ்ணு சகஸ்ரநாமம் படிப்பது நல்ல பலன் தரும். பெருமாளுக்கு துளசி மாலை சாத்தி வழிபட நிம்மதியான வாழ்வு அமையும். கோயிலுக்குச் செல்ல முடியாதவர்கள் வீட்டிலேயே விளக்கேற்றி வழிபடலாம். மாதந்தோறும் திருவோண நட்சத்திர நாளில், விரதம் மேற்கொண்டு பெருமாளை ஸேவித்து வந்தால், ஏழு பிறவியிலும் பதினாறு வகையான செல்வங்களைப் பெற்று, நிம்மதியும் நிறைவுமாக வாழலாம் என்பது ஐதீகம்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்