27-டிசம்பர்-2025
சென்னை: மார்கழி மாத சிறப்பு நிகழ்ச்சியாக, சென்னை அமைந்தகரை அய்யாவு மஹாலில், நாராயணீயம் சிறப்பு சொற்பொழிவு நடந்து வருகிறது. இதில் பிரவசன திலகம் ஸ்ரீ தாமல் ராதாகிருஷ்ணனும், அவரது சகோதரி பெருந்தேவி இணைந்து உபன்யாசத்தை வழங்கி வருகிறார்கள். இந்நிகழ்ச்சியில் ஆண்டாள் நாச்சியார் வழங்கிய திருப்பாவை 30 பாசுரங்களும், ஆண்டாள் திருக்கல்யாணமும் சிறப்பு பொம்மை கண்காட்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்ச்சி வரும் ஞாயிற்றுக்கிழமை 28ஆம் தேதி ருக்மணி கல்யாணம், நாராயணிய விஸ்வரூப தரிசனத்துடன் நிறைவடைகிறது. இதில் ஏராளமான ஆஸ்திக அன்பர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்கின்றனர்.நிகழ்ச்சிகளை ஸ்ரீ கணேஷ் குடும்பத்தினர் ஏற்பாடு செய்துள்ளனர்.