திருப்புவனத்தில் மண்டல பூஜை: கடவுள் வேடமணிந்து வலம் வந்த சிறுவர்கள்



திருப்புவனம்; திருப்புவனத்தில் மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பசுவாமி வீதியுலா உற்சவம் இன்று காலை நடந்தது. வீதியுலாவின் போது விரதம் இருந்த சிறுவர், சிறுமியர்கள் கடவுள் வேடமணிந்து வலம் வந்தனர். திருப்புவனம் நெல்முடிகரையில் ஒவ்வொரு ஆண்டும் ராமச்சந்திரன் குருசுவாமி தலைமையில் ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருந்து ஐயப்பனை தரிசனம் செய்து வருகின்றனர். இன்று மண்டல பூஜையை முன்னிட்டு ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. இதனையடுத்து ஐயப்ப பக்தர்கள் பலரும் ஐயப்பன் விக்ரகத்துடன் வீதியுலா வந்தனர். நெல்முடிகரையில் தொடங்கி எம்.ஜி.ஆர்., நகர், கோட்டை, உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக ஐயப்பன் பாடல்களை பாடியபடியே வலம் வந்தனர்.சிறுவர்கள் பலரும் வேடமணிந்து பக்தி பாடல்கள் பாடியபடியே வந்தனர். மதியம் அன்னதானம் நடந்தது. வீதியுலாவிற்கான ஏற்பாடுகளை ஞானசேகரன் குருநாதர், ஒண்டிப்புலி குருநாதர் தலைமையிலான பக்தர்கள் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 27

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்