பட்டவர்த்தி கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் விளக்கு பூஜை



மயிலாடுதுறை: மயிலாடுதுறை அருகே பட்டவர்த்தி, நடராஜபுரம் கிராமத்தில் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்று மண்டலாபிஷேக நிறைவு விழாவும், திருவிளக்கு பூஜையும் விமரிசையாக நடைபெற்றது காலை 10 மணி அளவில் சிறப்பு யாக பூஜையும், கன்னிகா பரமேஸ்வரி அம்மனுக்கு மஞ்சள் பொடி, மாப்பொடி, திரவியப்பொடி. பன்னீர், பஞ்சாமிர்தம், பால், தயிர், இளநீர், சந்தனம், தேன், புனிதநீர் அடங்கிய கலசாபிஷேகமும் நடைபெற்று சிறப்பு மலர் அலங்காரம் செய்து தீபாராதனை காட்டப்பட்டது மாலை 6.30 மணியாவில் திருவிளக்கு பூஜை தொடங்கி நடைபெற்றது அம்பாளுக்கு 108 அர்சனை, தேவாரம், திருவாசம், அபிராமி அந்தாதி பாராயணம் செய்து விவசாயம் செழிக்கவும், நோயற்ற ஆரோக்கியமான வாழ்வு கிடைக்கவும் வேண்டி கூட்டுவழிபாடு நடைபெற்றது, பூஜையில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு, தாலி கயறு, மஞ்சள், குங்குமம், வெற்றிலை பாக்கு, பழம் உள்ளிட்ட மங்கல பொருட்கள் தர்ம சம்ரக்ஷனா டிரஸ்ட் மூலம் வழங்கப்பட்டது திருவிளக்கு பூஜை நிகழ்வுகளை விஷ்வ ஹிந்து பரிஷத் மண்டல செயலாளர் செந்தில்குமார் ஒருங்கினைத்து நடத்தி வைத்தார், நிறைவாக தீபாராதனை காட்டி மங்கள வாழ்த்துடன் பூஜை நிறைவு பெற்றது கலந்து கொண்ட பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 18

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்