உத்தரகோசமங்கையில் பக்தர்கள் அவதி; போலீசாருக்கு வேண்டப்பட்டவர்களுக்கு மட்டும் சிறப்பு தரிசனம்



உத்தரகோசமங்கை; உத்தரகோசமங்கை மங்களநாதர் சுவாமி கோயிலில் பிரசித்தி பெற்ற ஆருத்ரா தரிசன விழாவை காண்பதற்காக மாவட்டம் மற்றும் பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.


உத்தரகோசமங்கையின் வடக்கு பகுதியில் சிறப்பு வாசல் அமைக்கப்பட்டு அவற்றில் விஐபி அட்டை வைத்திருக்கும் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தனர். ரூ.250, 100, 10 மற்றும் இலவச தரிசனம் உள்ளிட்டவைகள் பல்வேறு வரிசையாக கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டிருந்தன.  ராஜகோபுரத்தில் இருந்து கோயிலின் உள்பிரகாரங்கள் முழுவதும் சுற்றிலும் பக்தர்கள் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மரகத நடராஜர் சுவாமி தரிசனம் செய்வதற்குரிய சிறப்பு வழியில் போலீசாரின் குடும்பத்தினர் மற்றும் போலீசாருக்கு ஊதியம் வழங்கக்கூடிய அமைச்சுப் பணியாளர்கள் நீதிமன்ற ஊழியர்கள் உள்ளிட்டவர்களுடன் போலீசாருக்கு வேண்டப்பட்டவர்கள், உறவினர்கள், நண்பர்களுக்கு தனியாக வரிசை ஏற்படுத்தப்பட்டு உடனுக்குடன் அனுப்பி வைக்கப்பட்டனர். இவ்விஷயத்தில் முறையாக அணுக வேண்டும் என பக்தர்கள் போலீசாரிடம் கூறியபோது எங்களுக்கு எல்லாம் தெரியும்! யாரை அனுப்புவது என்றும்! யாரை அனுமதி அளிக்க கூடாது என்றும் ஒருமையில் பேசினர்.


பக்தர்கள் மற்றும் சிவனடியார்கள் கூறியதாவது: சமீப காலங்களாக ஹிந்து சமய அறநிலையத்துறையின் கோயில்களில் பக்தர்களுக்கு பல இடங்களில் உரிய மரியாதைகள் கிடைப்பதில்லை. பக்தர்கள் கொண்டு வரக்கூடிய காணிக்கைகள் மற்றும் நன்கொடைகளுக்காகவே அதிக அளவு முனைப்பு காட்டுகின்றனர். ஆனால் அவர்களுக்கான வசதிகள் குறைவாகவே செய்கின்றனர். இவ்விஷயத்தில் கடந்த இரண்டு நாட்களும் உத்தரகோசமங்கை கோயிலை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தாலும் வேண்டப்பட்டவர்களுக்கு சிறப்பு தரிசனம் செய்து காண்பிப்பதில் அதிக மெனக்கெடுக்கின்றனர் என தெரிவித்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 18

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 7

மேலும்