திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் தெப்ப முகூர்த்தம்



திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜன. 19ல் தெப்பத் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அதற்கான தேங்காய் தொடும் முகூர்த்தம், தெப்பமுகூர்த்தம் நேற்று கோயில் அலுவலகத்தில் நடந்தது. கோயில் ஸ்தானிக சிவாச்சாரியார்கள் தேங்காய், பழம், வெற்றிலை, பாக்கு ஆகியவற்றுடன் மேளங்கள் முழங்க‌ கோயில் அலுவலகம் சென்றனர். அங்கு அறங்காவலர் குழு தலைவர் சத்யபிரியாவிடம் தேங்காய் தொட்டு கொடுத்து, தெப்ப திருவிழா விவரங்களை கோயில் பேஷ்கார், நெடுஞ்செழியன் வாசித்தனர். கோயில் கண்காணிப்பாளராகள் ரஞ்சனி, சுமதி, சத்தியசீலன் கலந்து கொண்டனர். தெப்ப முகூர்த்தம்: தெப்பத் திருவிழா நடைபெறும் ஜி.எஸ்.டி., ரோடு பகுதியிலுள்ள தெப்பக்குளம் கரையில் யாகம் வளர்த்து சுத்தியல், உளி, அரிவாள், மிதவை தெப்பம் அமைக்க பயன்படுத்தப்படும் கருவிகள் வைக்கப்பட்டு பூஜை, தீபாரதனை நடந்தது. பின்பு விதவை தெப்பம் அமைப்பதற்கான டச்சு செய்யும் நிகழ்வு நடந்தது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 26

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 6

மேலும்