திருப்பதி தர்மகிரி வேத விஞ்ஞான பீடத்தில் 129வது பட்டமளிப்பு விழா கோலாகலம்



திருப்பதி; திருமலையில் உள்ள தர்மகிரியில் அமைந்துள்ள 141 ஆண்டுகள் பழமையான வேத விஞ்ஞான பீடத்தின் 129வது பட்டமளிப்பு விழா இன்று வியாழக்கிழமை கோலாகலமாக நடைபெற்றது.


இந்த நிகழ்வில், வேத விஞ்ஞான பீடத்தின் முதல்வர் குப்பா சிவ சுப்ரமணிய அவதானி பட்டம் வழங்கி சிறப்புறையாற்றினார். விழாவில் அவர் கூறியதாவது; வேத விஞ்ஞான பீடத்தின் 146 மாணவர்கள் வேதம், ஆகமம் மற்றும் ஸ்மார்த்த மரபுகளில் அறிஞர்களாகப் பயிற்றுவிக்கப்பட்டுள்ளனர். பட்டம் பெற்ற மாணவர்கள் ஆசிரியர்களாக ஆன பிறகு, தாங்கள் மாணவர்களாகப் பெற்ற அறிவைப் பயன்படுத்தி சிறந்த மாணவர்களை உருவாக்குவார்கள் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். எல்லாவற்றிற்கும் ஒரு முடிவு உண்டு, ஆனால் கல்விக்கு முடிவே இல்லை என்று அவர் வலியுறுத்தினார். அதனைத் தொடர்ந்து, வேதப் படிப்பை முடித்த 146 பட்டதாரிகளுக்கும் பட்டங்களுடன், ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியின் உருவம் பொறித்த வெள்ளி டாலர் வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் அறிஞர்கள், அலுவலக ஊழியர்கள் மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 26

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 6

மேலும்