ஓணகாந்தேஸ்வரர் கோவில் மார்ச் 8ல் கும்பாபிஷேகம்



காஞ்சிபுரம்: பெரிய காஞ்சிபுரம் பஞ்சுபேட்டையில் உள்ள ஓணகாந்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் மார்ச் 8ம் தேதி நடைபெற உள்ளது.


பெரிய காஞ்சிபுரம் பஞ்சுபேட்டையில் உள்ள ஓணகாந்தேஸ்வரர் கோவில், தேவாரப்பாடல் பெற்ற தொண்டை நாட்டு திருத்தலங்களில், மூன்றாவது தலமாக விளங்கி வருகிறது. இக்கோவிலில் ஓணகாந்தேஸ்வரர், காந்தேஸ்வரர், சலந்தரேஸ்வர் என மூன்று சிவன் சன்னிதிகள் உள்ளன. பல்வேறு சிறப்பு பெற்ற இக்கோவிலில், 2010ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. இந்நிலையில், இக்கோவிலில் பல்வேறு சன்னிதிகள், ராஜகோபுரம் உள்ளிட்டவை பொலிவிழந்தும், கோவில் அருகில் தெப்பகுளம் முறையான பராமரிப்பு இல்லாமலும்,, குளத்தில் செடிகள் வளர்ந்தும் இருந்தன. கோவிலை புனரமைக்கவும், குளத்தை சீரமைக்கவும் ஹிந்து சமய அறநிலையத் துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில், 47.40 லட்சம் ரூபாய் செலவில், கோவில் குளம் மற்றும் திருப்பணிக்கான பாலாலயம், 2024ம் ஆண்டு, செப்., மாதம், 8ம் தேதி நடந்தது. திருப்பணிநிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதையடுத்து மார்ச் 8ம் தேதி ஓணகாந்தேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது என, கோவில் செயல் அலுவலர் கேசவன் தெரிவித்தார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 26

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 6

மேலும்