ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் ஜன.,11ல் அஷ்டமி பூப்பிரதட்சனம் யொட்டி கோயில் நடை சாத்தப்படும் என கோயில் இணை ஆணையர் தெரிவித்தார்.
ஜன.,11ல் அஷ்டமி பிரதட்சனம் யொட்டி ராமேஸ்வரம் கோயில் இருந்து தங்க ரிஷப வாகனத்தில் சுவாமி, அம்மன் தங்க ரிஷப வாகனத்தில் எழுந்தருளி பஞ்சமூர்த்திகளுடன் வீதி உலா சென்று ஜீவராசிகளுக்கு படிப்போடுதல் நிகழ்ச்சி நடக்கும். இதனையொட்டி அன்று காலை 3:00 மணிக்கு கோயில் நடை திறந்து, காலை 3:30 மணி முதல் 4 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடக்கும். இதனைத்தொடர்ந்து காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி, அம்மன் புறப்பாடாகியதும், காலை 7 மணி முதல் மதியம் 1 மணி வரை கோயில் நடை சாத்தப்படும். பின் சுவாமி, அம்மன் கோயிலுக்கு திரும்பியதும், உச்சிகால பூஜை நடக்கும். இதன்பின் மதியம் 3:30 மணிக்கு கோயில் நடை திறந்ததும் பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என கோயில் இணை ஆணையர் செல்லதுரை தெரிவித்தார்.