பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் கூட்டம்



பழநி; பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு பக்தர்களின் கூட்டம் அதிகம் இருந்தது.


பழநி முருகன் கோயிலுக்கு விடுமுறை தினத்தை முன்னிட்டு தரிசனம் செய்ய அதிக அளவில் பாத யாத்திரை பக்தர்கள் கோயிலுக்கு வருகை புரிந்தனர். கோயிலில் பொது தரிசனம், கட்டண தரிசன வரிசையில் வெளிப்பிரகாரத்தை சுற்றி பக்தர்கள் சாரல் மலையில் காத்திருந்தனர். 3 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரோப்கார், வின்சில் கோயிலுக்கு செல்ல பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர். மழை காரணமாக ரோப் கார் பக்தர்கள் பாதுகாப்பு கருவி அடிக்கடி நிறுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது. கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த குடமுழுக்கு மண்டபம் வழியாக யானை பாதையை அடைந்து கோயில் செல்ல பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அடிவாரம் பகுதியில் முக்கிய சாலைகளில் ஆக்கிரமிப்பு அதிகம் உள்ளதால் போக்குவரத்து நெரிசலால் பக்தர்களுக்கு இடையூறு ஏற்படுகிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்