ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் யாததோர் மடம் ஸ்ரீ சங்கர பாரதி சுவாமி தரிசனம்



ஸ்ரீ காளஹஸ்தி; திருப்பதி மாவட்டம் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலுக்கு மைசூர், யாததோர் மடம் ஸ்ரீ சங்கர பாரதி சுவாமிஜி மற்றும் சீடர்கள் குழு  சாமி தரிசனம் செய்தனர். அவர்களுக்கு தேவஸ்தான அறங்காவலர் குழு உறுப்பினர்கள் குர்ரப்பா செட்டி, கோபிநாத் மற்றும் கோயில் அதிகாரிகள் சிறப்பு வரவேற்பு ஏற்பாடு செய்ததோடு சிறப்பு தரிசன ஏற்பாடுகளையும் செய்தனர். கோயிலுக்குள் சென்றவர்கள் ஸ்ரீ காளஹஸ்தீஸ்வரரையும் ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும்  மூலவர் சன்னதியில் சாமி தரிசனம் செய்தவர்களுக்கு  கோயில் வளாகத்தில் உள்ள தஷிணாமூர்த்தி சன்னதி அருகில் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததோடு கோயில் தீர்த்தப் பிரசாதங்களையும் சாமி படத்தையும் வழங்கினர். மேலும் கோயில் வேதப் பண்டிதர்கள் வேத ஆசிர்வாதங்களையும் செய்தனர். இந்த நிகழ்ச்சியில்  கோயில் துணை செயல் அதிகாரிகள் வித்யாசாகர் ரெட்டி,  மோகன், ஏ.பி.ஆர்.ஓ ரவி, துர்கா பிரசாத் மற்றும் வேத பண்டிதர்கள்  பங்கேற்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்