ஆல்கொண்டமால் கோவில் திருவிழா 16ல் சிறப்பு பூஜையுடன் துவக்கம்



உடுமலை: சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவில் திருவிழா வரும் 16ம் தேதி சிறப்பு அலங்கார பூஜையுடன் துவங்குகிறது.


உடுமலை அருகே சோமவாரப்பட்டியில், பிரசித்தி பெற்ற ஆல்கொண்டமால் கோவில் உள்ளது. பொங்கலையொட்டி, கோவிலில், நடக்கும் திருவிழாவில், பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்கின்றனர். குறிப்பாக, கால்நடை வளம் பெருகவும், அவற்றுக்கு ஏற்படும் பிரச்னைக்கு தீர்வு கிடைக்கவும் வழிபாடு செய்கிறார்கள். இந்தாண்டு திருவிழா, வரும் 16ம் தேதி அதிகாலை, 5:00 மணிக்கு, சிறப்பு அலங்கார பூஜையுடன் துவங்குகிறது. மதியமும், மாலை, 6:00 மணிக்கும் சிறப்பு பூஜை நடைபெறுகிறது. முக்கிய நிகழ்வான திருவிழா வரும் 17ம் தேதி நடக்கிறது. அன்று நாள் முழுவதும் ஆல்கொண்டமாலனுக்கு சிறப்பு பூஜைகள் நடக்கிறது. வரும் 18ம் தேதி இரவு, 7:00 மணிக்கு சிறப்பு பூஜையும், தீபாராதனையும், இரவு, 9:00 மணிக்கு சுவாமி திருவீதி உலா, மகா தீபாராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை ஹிந்து அறநிலையத்துறை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்