காரமடை; காரமடையில் முருக பக்தர்கள், 108 பால் குடங்கள் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.
தை பூசத்தை முன்னிட்டு, காரமடை முருக பக்தர்கள் குழு சார்பில், 50வது ஆண்டு பால் குடம் ஊர்வலம் நேற்று காலை நடைபெற்றது. இந்த ஊர்வலம் காரமடை கன்னார்பாளையம், தன்னாட்சியம்மன் கோயிலில் இருந்து 108 பால் குடங்களுடன் துவங்கி, காரமடை நான்கு ரத வீதி வழியாக சென்று, சிறுமுகை ரோடு நஞ்சுண்டேஸ்வரர் கோயிலுக்கு சென்றடைந்தது. இதில், பெண்கள் கலந்து கொண்டு, தங்களது நேர்த்திக் கடன்களை செலுத்தினர். இதற்கு தலைவர் கணேஷன் தலைமை தாங்கினார். செயலாளர் தண்டாயுதபானி, குருசாமி தங்கவேல், ஸ்ரீதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். காரமடை போலீசார் பாதுகாப்பு வழங்கினர்.