திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலம்



மயிலாடுதுறை:திருப்புங்கூர் சிவலோகநாதர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட திரளான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தாலுக்கா திருப்புங்கூர் கிராமத்தில் சௌந்தரநாயகி சமேத சிவலோகநாத சுவாமி கோவில் அமைந்துள்ளது. தேவார பாடல் பெற்ற இக்கோவிலில் நந்தனாருக்காக நந்தி வழி விலகி சிவபெருமான் காட்சி தந்த தலமாக திகழ்கிறது. மேலும் இத்தலம் காரிய தடை நிவர்த்தி ஸ்தலமாகவும் விளங்குகிறது. பிரசித்தி பெற்ற இக்கோவிலின் திருப்பணி  கோவில் நிர்வாகம், தருமபுரம் ஆதீனம் சென்னை மகாலட்சுமி சுப்பிரமணியன் அறக்கட்டளை, கோவை அரண் பணி அறக்கட்டளை ஆகியோரால் செய்யப்பட்டது திருப்பணிகள் நிறைவடைந்து 20 ஆண்டுகளுக்குப் பிறகு இன்று  காலை கும்பாபிஷேகம் நடந்தது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டுகடந்த 23ஆம் தேதி பூர்வாங்க பூஜையும், 27ஆம் தேதி முதல் கால யாக பூஜையும் தொடங்கி நடைபெற்றது. இன்று காலை 6ம் கால யாகசாலை பூஜை நிறைவடைந்து பூர்ணாஹுதி மற்றும் மகா தீபாராதனை நடந்தது. காலை 8 மணிக்கு யாகசாலையில் இருந்து கடங்கள் புறப்பாடு செய்யப்பட்டு கோவிலை வலம் வந்து ராஜகோபுரம், சுவாமி, அம்பாள் மற்றும் பஞ்சமூர்த்திகள் சன்னதி விமானங்களை அடைந்தது.  தொடர்ந்து தருமபுரம் ஆதீனம் 27 வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் மங்கள வாத்தியங்கள் இசைக்க, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓதி ஏக காலத்தில் கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து மூலவர்களுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இதில் தருமபுரம் ஆதீன தம்பிரான்கள், சென்னை மகாலட்சுமி, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட திரளான ப.க்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்து திருவருளை பெற்றனர். கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகளை கோவில் சிப்பந்திகள் செய்திருந்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்