பழநி: பழநியில் ஹிந்து சமய அறநிலைத்துறை சார்பில் நடந்த முத்தமிழ் முருகன் மாநாட்டில் பழநி முருகன் கோயிலில் அறிவிக்கப்பட்ட வேல் அமைக்கப்பட்டு பிப்.8.,ல் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது.
பழநியில் ஹிந்து சமய அறநிலை துறை சார்பில் முத்தமிழ் முருகன் மாநாடு 2024, ஆக., 24,25 நடைபெற்றது. இதில் பழநி நகரில் சித்த மருத்துவ ஆராய்ச்சி மையம், பழநி முருகன் கோயிலில் 15 அடி உயர வேல் நிறுவுதல் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. 7 டன் எடையில் 15 அடி உயர வேல் கருங்கல்லில் செதுக்கும் பணி தீவிரமாக நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு பணிகள் நிறைவடைந்த நிலையில் சிலை வேல் படிப்பாதை துவங்கும் பகுதியில் மயில் சிலைக்கு முன்புறம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை முறைப்படி பிப்.,8., திருக்குட நன்னீரட்டு விழா நடத்தி பிரதிஷ்டை செய்யப்படும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.