ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் கோலாகலம்



விருதுநகர்; திருச்சுழி அருகே ஸ்ரீ ராமதேவர் சித்தர் பீடத்தில் அஷ்டபந்தன மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது.


விருதுநகர் மாவட்டம் திருச்சுழி தாலுகா பூம்பிடாகை கிராமத்தில் ஸ்ரீ மரகதவல்லி தாயார் உடனுறை முகதீஸ்வரர் ஆலயத்தில் ஸ்ரீ ராமதேவர் சித்தர் பிடம் அமைந்துள்ளது. இந்நிலையில் இன்று மகா அஷ்டபந்தன கும்பாபிஷேக விழா ஆன்மீக சிவனடியார்கள் தலைமையில் வெகு விமர்சையாக நடைபெற்றது. மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு சித்தர் பீடத்திற்கு கைலாய வாத்தியங்கள் முழங்க பால் இளநீர் விபூதி உள்ளிட்ட பல்வேறு வகை பொருட்களால் சிறப்பு அபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த மகா கும்பாபிஷேக விழாவில் திருச்சுழி பகுதியைச் சார்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் மேற்கொண்டனர். மேலும் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்