பொள்ளாச்சி மாரியம்மன் தேர் சக்கரத்தில் உப்பு, மிளகு கொட்டி வழிபாடு



பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா கடந்த மாதம் 17ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. நேற்று வெள்ளி தேரோட்டம் துவங்கியது. 12 அடி உயர மரத்தேரில் விநாயகரும், 21 அடி உயர வெள்ளித்தேரில் மாரியம்மனும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். கோவிலில் இருந்து மார்க்கெட் வீதி வழியாக வந்து வெங்கட்ரமணன் வீதியில் தேர் நிறுத்தப்பட்டது. அங்கு பக்தர்கள், தேரின் சக்கரத்தில் உப்பு, மிளகு கொட்டி அம்மனை வழிபட்டனர்.  நேற்று இரவு, வெங்கட்ரமணன் வீதி, உடுமலை ரோடு வழியாக சென்று சத்திரம் வீதியில் தேர் நிறுத்தப்பட்டது. நாளை மூன்றாம் நாள் தேரோட்டம் நடக்கிறது. அதில், சத்திரம் வீதியில் துவங்கி, கோவிலில் தேர் நிலை நிறுத்தப்படுகிறது. அதன்பின், பரிவேட்டை, தெப்பத்தேர் வைபவமும் நடக்கிறது.  நாளை மஞ்சள் நீராடுதல், கம்பம் எடுத்தல் நிகழ்ச்சியும், 16ம் தேதி மஹா அபிஷேகமும் நடக்கிறது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்