வால்பாறையில் இருந்து பறவை காவடி; வைரவேலுடன் சாமி தரிசனம்



பழநி; பழநி முருகன் கோயிலுக்கு கோவை மாவட்டம் வால்பாறை சேர்ந்த பக்தர்கள் பறவை காவடி எடுத்து வந்தனர்.


பழநி முருகன் கோயிலுக்கு தைப்பூச திருவிழா நிறைவடைந்த நிலையில் தொடர்ந்து பக்தர்கள் பல்வேறு மாவட்டங்களில் இருந்து நேர்த்திக்கடன் செலுத்த வருகை புரிந்த வண்ணம் உள்ளனர். கோவை மாவட்டம், வால்பாறை சேர்ந்த பக்தர்கள் ஆண்டுதோறும் பறவை காவடி எடுத்து வருவது வழக்கம். வால்பாறையில் 56 எஸ்டேட் பகுதியில் வாழும் மக்கள், மாலை அணிந்து விரதம் இருந்து வருகை புரிந்தனர். 50 ஆண்டுகளாக பறவை காவடி எடுத்து வருகின்றனர். சண்முக நதியில் அலகு குத்தி, இரு கிரேனில் பறவை காவடி எடுத்து வந்தனர். பறவை காவடியுடன் பலர் 15 அடி நீளம் உள்ள அலகு குத்தி வந்தனர். 50 ஆண்டுகளாக பறவை காவடி எடுத்து வருவதை முன்னிட்டு இந்த ஆண்டு வைரவேலை, பாதயாத்திரை ஆக எடுத்து வந்தனர். மேலும் பால்காவடி, இளநீர் காவடி, மயில் காவடி ஆகியவற்றை எடுத்து வந்தனர். அலகு குத்தி வந்த நபர்களிடம் குழந்தையை கொடுத்து ஆசீர்வாதம் பெற்றனர். வால்பாறை பக்தர்கள் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று கிரி வீதியில் வலம் வந்தனர். முருகன் கோயில் சுவாமி தரிசனம் வைரவேலை எடுத்துச் சென்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்