காளஹஸ்தி; காளஹஸ்தி சிவன் கோயிலுக்கு வருகை தரும் பக்தர்கள் மற்றும் கோயில் தங்குமிட அறைகளில் தங்குபவர்களின் வசதிக்காக, கோயில் சார்பில் *இலவச பேருந்து* வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கைலாசதனம், கங்கா சதனில் இருந்து அதிகாலை 3.00 மணி முதல் காலை 8.00 மணி வரையிலும், மாலை 5.30 மணி முதல் இரவு 8.00 மணி வரையிலும் கோயிலின் 4-வது வாயில், ரயில் நிலையம், வரதராஜ சுவாமி விருந்தினர் மாளிகை, (ஆர்.டி.சி ) அரசு பேருந்து நிலையம், பக்த கண்ணப்ப சதன், 1-வது வாயில், 4-வது வாயில் மற்றும் கைலாசதனம், கங்கா சதன் விருந்தினர் மாளிகைக்கு இலவச பேருந்து இயக்கப்படும். இதே போல் காலை 9.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரை மற்றும் மதியம் 1.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை, கைலாச சதன், கங்கா சதன் முதல் 4-வது கேட், 1-வது கேட், (ஆர்.டி.சி) அரசு பேருந்து நிலையம் (உள்ளே,) வி.எம்.சி வட்டம், பக்த கண்ணப்ப சதன், 1-வது கேட், 4-வது கேட் வரை கைலாச சதன், கங்கா சதன் வரை இலவச பேருந்து இயக்கப்படும். எனவே, பக்தர்கள் மேற்கூறிய *இலவச பேருந்து* வசதியை கருத்தில் கொண்டு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோயில் செயல் அலுவலர் வெங்கடேசுலு அறிவுறுத்தினார்.