திருப்பதி ; திருப்பதி ஸ்ரீவாரி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்தபோது, ராஜமகேந்திரவரத்தைச் சேர்ந்த ஸ்ரீ அனுபோஜு வீர நவீன் என்ற பக்தர், நாராயணகிரி ஷெட்களில் காத்திருந்த சக பக்தர்களை கோஷங்கள் எழுப்புமாறு தூண்டியுள்ளார். இந்தச் சம்பவம் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டதை அடுத்து, சம்பந்தப்பட்ட அந்தப் பக்தர் விசாரணைக்கு அழைக்கப்பட்டார். தரிசன வரிசையில் கோஷங்களை எழுப்புவதும், மற்றவர்களைத் தூண்டிவிடுவதும் தனது தவறு என்று அந்தப் பக்தர் ஒப்புக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து, அந்தப் பக்தர் தனது செயலுக்காக நிர்வாகத்திடமும் மற்றும் சக பக்தர்களிடமும் மன்னிப்பு கோரினார். ஸ்ரீவாரி தரிசனத்திற்காகத் தங்களது முறை வரும் வரை காத்திருக்கும் போது, பக்தர்கள் அனைவரும் நிதானத்தையும் பொறுமையையும் கடைபிடிக்க வேண்டும் என்றும், ஊழியர்களுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.