திருவண்ணாமலை; திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் பக்தர்கள் கிரிவலம் செல்ல இலவச பஸ் பயணம் பக்தர்கள் பயன்பாட்டுக்கு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், வாரவிடுமுறை நாள் என்பதால் நேற்று சுவாமி தரிசனம் செய்ய பக்தர்கள் குவிந்தனர். கொளுத்தும் வெயிலின் பொருட்படுத்தாமல் நீண்ட வரிசையில், காத்திருந்து தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு கோவில் சார்பில் நீர் மோர் வழங்கப்பட்டது. கோவில் சார்பில் காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் கிரிவலம் செல்ல இலவச பஸ் பயணம் பக்தர்கள் பயன்பாட்டுக்கு நேற்று முதல் தொடங்கப்பட்டுள்ளது. நேற்று முதல் 5 பஸ்கள் விடப்பட்டது. நேற்று சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் இலவச பஸ் பயணம் துவக்கி வைக்கப்பட்டது. காலை 8 மணி முதல் இரவு 8 மணி வரை பக்தர்கள் பயணம் செய்யலாம்.