கீழச்சிவல்பட்டி ஆஞ்சநேயர் கோயிலில் பஞ்சாங்கம் வெளியீடு



திருப்புத்தூர்; திருப்புத்தூர் ஒன்றியம் கீழச்சிவல்பட்டியில்  தமிழ்நாடு பிராமணர் சங்கம்  சார்பில் பஞ்சாங்கம் வெளியிட்டு விழா நடந்தது.


தமிழ்நாடு பிராமணர் சங்க கீழச்சிவல்பட்டி கிளையில் ஆஞ்சநேயர் கோயிலில் நடந்த வெளியீடு விழாவிற்கு  மாவட்டத் தலைவர் வே.சிவக்குமார் தலைமை வகித்தார். கிளைத் தலைவர் சேகர் முன்னிலை வகித்தார். செயலாளர்கள் எஸ்.நாராயணன், எஸ்.பாலசுப்பிரமணியம் வரவேற்றனர். பிள்ளையார்பட்டி தலைமைக்குருக்கள் பிச்சைக்குருக்கள் பராபவ வருட வாக்கிய பஞ்சாங்கத்தை வெளியிட்டு ஆசியுரை வழங்கினார். பிள்ளையார்பட்டி  துணை தலைவர் சோமசுந்தர குருக்கள், மாவட்ட ஆலோசகர் சுரேஸ்சர்மா, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் சிவகுமார், மாவட்ட துணை தலைவர் கேஆர். வைத்தியநாதன், மாவட்ட, கிளை நிர்வாகிகள் ஜெயராமன், ஆனந்த்,கணேசன் ஆகியோர் வாழ்த்தினர். மகளிர் தினவிழா குறித்து மாவட்ட மகளீரணி அமைப்பாளர் சந்திரா பேசினார். ஜோதிடர் எஸ்.வெங்கட்ராமய்யங்கார் படம் திறக்கப்பட்டது. மாவட்ட பொருளாளர் கோபாலகிருஷ்ணன் நன்றி கூறினார்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்