புவனகிரி: புவனகிரியில் வள்ளலார் கோவில் சகல வசதிகளுடன், புதிதாக கட்டுவதற்கு பூமி பூஜை நடத்திய நிலையில் பூர்வாங்க பணிகளை துவக்கினர். புவனகிரியில் குருவருளோடு தயா நிலையம் இயங்கி வருகிறது. இங்கு அனைத்து வசதிகளுடன் புதிய கட்டிடம் கட்டுவதற்கு, கடந்த பிப்ரவரி மாதம் அருட்பெருஞ்ஜோதி இடமாற்றம் செய்து பழைய கட்டடத்தை இடித்து அகற்றினர். அதன் பின் பூமி பூஜை நடந்தது. தற்போது, பூர்வாங்கப்பணிகள் துவங்கி உள்ளது. விழா குழுவினர்கள் டாக்டர் செந்தில்வேலன், வெள்ளியம்பலம் அறக்கட்டளை நிர்வாகி ரத்தினசுப்ரமணியன், தயா நிலைய துணைத்தலைவர் கிருஷ்ணசாமி, பழனிச்சாமி, சுந்தர வினாயகம், கணேசன், இளங்கோ உள்ளிட்ட குழுவினர்கள் பணிகளை மேற்கொண்டுள்ளனர்.