வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா



வால்பாறை: பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு, 1ம் தேதி சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாணம் நடக்கிறது.


வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், 74ம் ஆண்டு பங்குனி உத்திரத்திருவிழா நேற்று காலை, கொடியேற்றத்துடன் துவங்கியது. 1ம் தேதி மாலை, 4:00 மணிக்கு சுப்ரமணிய சுவாமிக்கும், வள்ளி– தெய்வானை அம்மனுக்கும் திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. அதனை தொடர்ந்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படுகிறது. வரும், 2ம் தேதி காலை, 9:00 மணிக்கு நல்லகாத்து பாலத்தில் இருந்து பக்தர்கள் அலகு பூட்டியும், பறவைக்காவடி எடுத்தும் ஊர்வலமாக கோவிலுக்கு செல்கின்றனர். காலை, 11:00 மணிக்கு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. மாலையில் அலங்கரிக்கபட்ட தேரில் சுப்ரமணிய சுவாமி தேவியருடன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழா ஏற்பாடுகளை முருகன் நற்பணி மன்ற நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்