காரைக்குடி; குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திரத் திருவிழாவை முன்னிட்டு இன்று தேரோட்டம் நடந்தது.
குன்றக்குடி சண்முகநாதப் பெருமான் கோயில் பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு மார்ச் 22ம் தேதி மாலை 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜையும் மார்ச் 23ம் தேதி கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. தினமும் இரவு, சண்முகநாதன் பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து திருக்கல்யாணமும் பூப்பல்லாக்கு நிகழ்ச்சியும் தெப்பத் திருவிழாவும் நடந்தது. இன்று முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடந்தது. காலையில் தேருக்கு சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சியும் மாலை 5.00 மணிக்கு தேரோட்டமும் நடந்தது. இன்று காலை உத்திர தீர்த்தவாரியும், இரவு மயிலாடும்பாறையில் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை குன்றக்குடி பொன்னம்பல அடிகளார் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.