மயிலம் அக்னி குளத்தில் முருகனுக்கு தீர்த்தவாரி



மயிலம்:  மயிலம் முருகன் கோவில் பங்குனி உத்திரப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்த வாரி உற்சவம் அக்னி குளத்தில் நடந்தது 


 மயிலம் முருகன் கோவிலில் பங்குனி உத்திர  விழாவையொட்டி கொடியேற்றத்துடன் விழா தொடங்கி நடந்து வருகிறது. தினசரி  உற்சவர் வெள்ளி விமானம், ஆட்டுக்கிட, யானை, நாக,  தங்க மயில் வாகனங்களில் மலை வலத்தில்  காட்சியளித்து வருகிறார்.  கடந்த 30ம் தேதி வள்ளி தெய்வானை சுப்ரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்வான தேர் திருவிழா நேற்று முன்தினம் காலை 6:00 மணிக்கு பேரடி வீதியில் நடந்தது . நேற்று பகல் 1:00 மணிக்கு தீர்த்த வாரி உற்சவமும், இதனை தொடர்ந்து 2ம் தேதி முத்து பல்லக்கில் சுவாமி கிரிவல காட்சி நடக்கிறது. ஏற்பாடுகளை மயிலம் பொம்மபுர ஆதீனம் இருபதாம் பட்டம் சிவஞான பாலய சுவாமிகள் செய்து வருகிறார். மற்றும் கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்