உடுமலை மாரியம்மன் தேர்த்திருவிழா கம்பம் நடுதல் நிகழ்ச்சி



 உடுமலை: உடுமலை மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழாவையொட்டி, நேற்று கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது.


உடுமலையில் பிரசித்தி பெற்ற பண்டிகையாக மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா உள்ளது. திருவிழாவுக்கு, மார்ச் 24ல், நோன்பு சாட்டப்பட்டது; 27ல், பூச்சொரிதல் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ச்சியாக நேற்று, கம்பம் நடுதல் நிகழ்ச்சி நடந்தது. பஸ் ஸ்டாண்ட் அருகில் இருந்து, திருக்கம்பம் எடுத்து வரப்பட்டு, கோவிலில், நிலைநாட்டப்பட்டது. கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர், செயல் அலுவலர் மல்லிகா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். திருக்கம்பத்துக்கு, பக்தர்கள் தீர்த்தம் செலுத்தி வழிபட்டனர். வரும் 3ம் தேதி பகல், 12:35 மணிக்கு மேல், 1:30 மணிக்குள் கொடியேற்றம் நடக்கிறது. வரும் 9ம் தேதி காலை, 6:30 மணிக்கு மேல், 8:00 மணிக்குள் மகாசக்தி ஸ்ரீ மாரியம்மன் சுவாமியுடன் திருத்தேருக்கு எழுந்தருளுகிறார். அன்று மாலை, 4:15 மணிக்கு மேல் திருத்தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவையொட்டி, குட்டைத்திடலில், பல்வேறு கேளிக்கை விளையாட்டு சாதனங்கள் அமைக்கப்பட்டுள்ளது. நாள்தோறும் பல்வேறு ஆன்மிக மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் குட்டை திடலில் நடைபெற உள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்