கோவை: சாய்பாபா காலனி கே கே புதூர் காளியம்மன் கோவில் தெரு எண் - 9ல் அமைந்துள்ள ஸ்ரீ காளியம்மன் கோவிலில் 65-ம் ஆண்டு உற்சவ விழா நடந்து வருகிறது இதன் ஒரு பகுதியாக சக்தி கரகம் ஊர்வலம் நகர வீதிகளில் வலம் வந்தது இதில் அணி கூடை சுமந்து கொண்டு மாரியம்மன் திருவுருவம் பதித்த கூடையை தலையில் வைத்துகொண்டும் அக்னி சட்டியை கையில் ஏந்தி கொண்டும் பக்தர்கள் வீதியுலா வந்தனர் இந்த நிகழ்வையொட்டி மூலவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார் நிறைவாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது