பங்குனி உத்திர திருவிழா : சுப்ரமணிய சுவாமிக்கு புஷ்பாஞ்சலி பூஜை



போடி; போடி சுப்ரமணியர் சுவாமி கோயிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு வள்ளி, தெய்வானையுடன் முருகனுக்கு புஷ்பாஞ்சலி சிறப்பு பூஜை நடந்தது.


போடி சுப்பிரமணியர் சுவாமி கோவிலில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு புஷ்பாஞ்சலி பூஜை கோயில் பரம்பரை அறங்காவலர் முத்துராஜன் தலைமையில் நடந்தது. செயல் அலுவலர் சுந்தரி முன்னிலை வகித்தார். முருகன், வள்ளி, தெய்வானைக்கு சிறப்பு பூஜை, அபிஷேகம், தீபாராதனைகளுடன் புஷ்பாஞ்சலி பூஜை நடந்தது. சுவாமி அலங்காரத்தினை விக்னேஸ்வர கந்த குருக்கள் செய்திருந்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமியின் தரிசனம் பெற்றனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்