குன்னூர் சரவணமலையில் பங்குனி உத்திரம் திருவிழா



குன்னூர்; குன்னூர் சரவணமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் இன்று பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடந்தது. நீலகிரி மாவட்டம் குன்னூர் சரவணமலை பாலதண்டாயுதபாணி கோவிலில் சமீபத்தில் கும்பாபிஷேகம் நடந்தது. இன்று பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பாலதண்டாயுதபாணிக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தது. குன்னூர் விநாயகர் கோவிலில் இருந்து பக்தர்கள் தீர்த்த குடங்கள் மற்றும் காவடிகளை ஏந்தி 5 கி.மீ., தூரம் ஊர்வலமாக வந்தனர். பாலதண்டாயுதபாணிக்கு அபிஷேகம் அலங்காரம் மகா தீபாராதனை நடந்தது . தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர். வெலிங்டன் பாலசுப்ரமணிய சுவாமி கோவிலில் கணபதி சுப்ரமணிய சுவாமிகளுக்கு சிறப்பு மூல மந்திர ஹோமங்கள், அபிஷேகம் , அலங்காரம் கணபதி பூஜை, திருக்கல்யாண உற்சவம், மகா தீபாராதனை , ஊஞ்சல் உற்சவம் இடம்பெற்றது. அன்னதானம் வழங்கப்பட்டது . ஏற்பாடுகளை வெலிங்டன் பகுதி பக்தர்கள் செய்திருந்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்