சுதந்திரநல்லூர் மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா



அவிநாசி; அவிநாசி அடுத்த சுதந்திரநல்லூர் என அழைக்கப்படும் நாதம் பாளையத்தில் ஸ்ரீ மாரியம்மன் கோவில் பூச்சாட்டு விழா நடைபெற்றது.


அவிநாசி அடுத்த சுதந்திரநல்லூர் என அழைக்கப்படும் எம்.நாதம் பாளையத்தில் எழுந்தருளியுள்ள மாரியம்மன் கோவிலில் பூச்சாட்டு விழா கடந்த 28ம் தேதி காப்பு கட்டுதல், கம்பம் நடுதல், பொட்டுசாமி பொங்கல் ஆகிய நிகழ்ச்சிகளுடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து பூவோடு எடுத்தல், அபிஷேக ஆராதனை, தீர்த்தக்குடம், இளநீர் காவடி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நாள்தோறும் நடைபெற்றது. இன்று அம்மை அழைத்தல், மாவிளக்கு எடுத்தல்,கம்பம் கங்கையில் விடுதல் ஆகிய நிகழ்ச்சிகள் மற்றும் அலங்கார பூஜை, திருக்கல்யாணம் ஆகியவை நடைபெற்றது. நாளை மஞ்சள் நீர் விழா,மறு பூஜை நிகழ்ச்சியுடன் பூச்சாட்டு விழா நிறைவு பெறுகிறது. கோவில் விழா குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் சார்பில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்