திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோவிலில் பங்குனி ரத உற்சவம் துவக்கம்



ஸ்ரீரங்கம் : ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலின் உபகோயிலான திருவெள்ளறை புண்டரீகாட்ச பெருமாள் கோயிலில் பங்குனி ரத உற்சவம் இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.  


திருச்சிராப்பள்ளிக்கு அருகில் துறையூர் போகும் வழியில் அமைந்துள்ள இக்கோயில் சோழநாட்டில் அமைந்துள்ள 108 வைணவத் திவ்ய தேசங்களில் நான்கவது திவ்ய தேசமாகும். மூலவர் புண்டரீகாட்ச பெருமாள், உற்சவ மூர்த்தி செந்தாமரைகண்ணன், மற்றும் உற்சவ தாயார் திருநாமம் பங்கயச்செல்வி பங்கஜவல்லி ஆகும். இக்கோவிலில் பங்குனி ரத உற்சவம் இன்று அதிகாலை துவஜாரோஹணம் (கொடியேற்றம்) மேஷ லக்னத்தில் துவங்கியது.  முதல் நாளான இன்று (4ம்தேதி) காலை 4.00 மணியளவில் உற்சவமூர்த்தி மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டார். பின்னர் அனந்தராயர் மண்டபத்திலிருந்து கொடிப்படம் திருவீதி உலா வந்து மேஷ லக்னத்தில் துவஜாரோஹணம்   மற்றும் பெருமாள் ஆஸ்தானம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்