பரமக்குடி: பரமக்குடி– முதுகுளத்துார் ரோட்டில் உள்ள காந்தக்குளத்து முனியப்ப சுவாமி, காளீஸ்வரி அம்மன் கோயில் பால்குட விழா நடந்தது.
காட்டுப்பரமக்குடி கலியுகம் கண்ட விநாயகர் கோயிலில் இருந்து பக்தர்கள் பால்குடம், அக்னி சட்டி, இளநீர், வேல் காவடி எடுத்துச் சென்றனர். தொடர்ந்து ஓட்டப்பாலம், ஐந்து முனை, பொன்னையாபுரம் வழியாக 4 கி.மீ., சென்று கோயிலை அடைந்ததும் அபிஷேக, ஆராதனைகள் நடந்தன.