மழை வளம் வேண்டி அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் உச்சிப் பிள்ளையாருக்கு அபிஷேகம்



அவிநாசி: அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி, சிறப்பு அபிஷேகம், பூஜைகள் நடைபெற்றது.

அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப்பிள்ளையாருக்கு மழை வளம் வேண்டி சிறப்பு அபிஷேக பூஜைகள் நடைபெற்றது. அவிநாசி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த இரண்டு மாதத்திற்கும் மேல் கடும் தண்ணீர் பஞ்சம் ஏற்பட்டுள்ளது. மக்களின் அன்றாட அத்தியாவசிய தேவையான தாகம் தீர்க்கம் குடிநீர் கூட கிடைப்பது மிகவும் சிரமமானது. அவிநாசி நகராட்சிக்குட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்கிய மேட்டுப்பாளையம் சிறுமுகை ஆற்றுப் பகுதியில் தண்ணீர் வற்றியது. இதனால் அவிநாசி சுற்றுவட்டாரப் பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்து ஒரு மாதத்திற்கு மேல் ஆனது. மேலும் நகராட்சிக்குட்பட்ட வார்டு பகுதிகளில் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது.

இந்நிலையில் அவிநாசி லிங்கேஸ்வரர் கோவில் ராஜகோபுரத்தில் உள்ள உச்சிப் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் அலங்கார பூஜைகள் செய்தால் மலை வரும் என்பது ஐதீகம். அந்த வகையில் தற்போது நிலவிவரும் தண்ணீர் பஞ்சத்தை போக்குவதற்கு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மழை பெய்து ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து,மக்களின் அன்றாட தேவையான குடி தண்ணீர் தடையின்றி கிடைக்க உச்சிப் பிள்ளையாருக்கு சிறப்பு பூஜைகள் செய்திட பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து,ஹிந்து சமய அறநிலையத் துறையினர் பக்தர்களின் கோரிக்கையை ஏற்று, நேற்று முதல் வரும் 16ம் தேதி வரை உச்சிப்பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம், நெய்வேத்தியம், பூஜைகள் நடத்துகின்றது. முன்னதாக இன்று காலை கணபதி ஹோமம் நடைபெற்றது. அதைத் தொடர்ந்து உச்சிப் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்று தீபாராதனை நடந்தது. பக்தர்களின் கோரிக்கையை ஏற்று அவிநாசி நகர மக்களின் நலன் கருதி உச்சிப் பிள்ளையாருக்கு சிறப்பு அபிஷேகம் பூஜைகள் செய்திட நடவடிக்கை எடுத்த செயல் அலுவலர் சபரீஷ் குமாருக்கு பக்தர்கள் நன்றி தெரிவித்தனர்.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்