அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ராமர் பட்டாபிஷேக விழா



அன்னூர்:அன்னூர் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் ஸ்ரீ ராமர் பட்டாபிஷேக விழா நடந்தது.

அன்னூர் கரி வரதராஜ பெருமாள் கோவிலில், ராமநவமியை முன்னிட்டு 10 நாள் தொடர் சொற்பொழிவு கடந்த 26ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் நிறைவு நாள் சொற்பொழிவு நடந்தது.

ராமர் பட்டாபிஷேகம் குறித்து புலவர் மகேஸ்வரி சத்குரு பேசுகையில், "நல்லொழுக்கத்தை போதிக்கும் இதிகாசங்களை இளைய சமுதாயத்திற்கு கற்பிக்க வேண்டும். அது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மதிப்பெண்களுக்காக படிப்பதுடன் நல்லொழுக்கத்திற்காகவும் கற்பிக்க வேண்டும். ராமாயணத்தை வாசித்தால் மன நிம்மதி ஏற்படும். தீய எண்ணங்கள் விலகும்," என்றார். இதையடுத்து ராமர் பட்டாபிஷேகம் நடந்தது. அபிஷேக பூஜை, அலங்கார பூஜை நடந்தது. அன்னதானம் வழங்கப்பட்டது. அறங்காவலர்கள், கட்டளைதாரர்கள், பொதுமக்கள் என நூற்றுக்கணக்கானோர் பங்கேற்றனர். மாலையில் ஆஞ்சநேயருக்கு 1008 வடை மாலை சாற்றி சிறப்பு வழிபாடு நடந்தது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்