புதுச்சேரி: புதுச்சேரி வரதராஜப் பெருமாள் கோவிலில் ஊஞ்சலம் உற்சவம் நடந்தது.
புதுச்சேரி காந்தி வீதியில் அமைந்துள்ள வரதராஜப் பெருமாள் கோவிலில் 60ம் ஆண்டு ஊஞ்சல் உற்சவம் கடந்த 9ம் தேதி துவங்கியது. அதையொட்டி, அன்று காலை 10:30 மணிக்கு பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், இரவு 8:00 மணிக்கு தெப்ப உற்சவம் நடந்தது.
நேற்று முன்தினம் காலை 10:30 மணிக்கு பெருமாளுக்கு திருமஞ்சனம், இரவு 8:00 மணிக்கு முத்துபல்லக்கில் வீதியுலா நடந்தது. நேற்று காலை 9:00 மணிக்கு பெருமாளுக்கு விசேஷ அலங்கார திருமஞ்சனம், மதியம் 12:00 மணிக்கு சேவை சாற்று முறை, பிரசாதம் வினியோகம் நடந்தது. இரவு 8:00 மணிக்கு சுவாமி உள் புறப்பாடு, இரவு 9:00 மணிக்கு கோதண்டராமர் அலங்காரத்தில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை கோவில் தனி அதிகாரி மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.