அன்னமலை முருகன் கோவிலில் மஹா கும்பாபிேஷகம்



 மஞ்சூர்: மஞ்சூர் அன்னமலை முருகன் கோவிலில் இன்று மஹா கும்பாபிேஷகம் நடக்கிறது.:

மஞ்சூர் அருகே பிரசித்தி பெற்ற அன்னமலை முருகன் கோவில் உள்ளது. கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி தலைமையில், இளைய மடாதிபதி வடிவேல் சுவாமி முன்னிலையில் கோவிலில் திருப்பணி மேற்கொள்ள முடிவெடுக்கப்பட்டது. அதன்படி, கடந்த சில நாட்களாக திருப்பணிகள் மேற்கொண்டு கோவில் கோபுரங்களுக்கு வர்ணம் பூசி பொலிவுப்படுத்தினர். பணிகள் நிறைவடைந்த நிலையில், இன்று காலை, 6:00 மணிக்கு கணபதி பூஜையை தொடர்ந்து, கோவை காமாட்சிபுரி ஆதீனம் இரண்டாம் சன்னிதானம் சாந்தஸ்ரீ பஞ்சலிங்கேஸ்வர சுவாமிகள் தலைமையில் காலை, 9:00 மணி முதல், 10:30 மணி வரை திருக்குட நீராட்டு பெருவிழா நடக்கிறது. விழாவின் ஒரு பகுதியாக மகா தரிசனம், தீர்த்த பிரசாதம் வழங்குதல், அலங்கார பூஜை தரிசனம், அன்னதானம் நிகழ்ச்சி நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் ஸ்தாபகர் குரு கிருஷ்ணாநந்தாஜி செய்தி வருகிறார். நாளை, 14 ம் தேதி காலை,8:30 மணிக்கு தமிழ் புத்தாண்டை ஒட்டி, 37 ம் ஆண்டு காவடி பெருவிழா சிறப்பாக நடக்கிறது. 

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்