கல்பத்தியில் ஆண்டாள் வைபவம் ஆன்மீகச் சொற்பொழிவு



பாலக்காடு: கேரள பிராமண சபா கல்பத்தி உபசபையின் சார்பில், பிரபல ஆன்மீகச் சொற்பொழிவாளர் வெங்கடேஷ் அவர்களின் ஆண்டாள் வைபவம் குறித்த ஆன்மீகச் சொற்பொழிவு கல்பத்தி ஷிப்ரா கணபதி ஹாலில் சிறப்பாக நடைபெற்றது.


சங்கரா தொலைக்காட்சியின் புகழ்பெற்ற சொற்பொழிவாளரான வெங்கடேஷ், ஆண்டாளின் பெருமைகளையும் ஆன்மீகச் சிறப்புகளையும் விளக்கி உரையாற்றினார்.  இந்த ஆன்மீக நிகழ்வை கேரள பிராமண சபையின் முன்னாள் மாநிலத் தலைவர் கரிம்புழா ராமன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். கல்பத்தி உபசபைத் தலைவர் காசி விஸ்வநாதன் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். சபை நிர்வாகிகளான சந்தான கோபாலகிருஷ்ணன் கிருஷ்ணமணி, கோபாலகிருஷ்ணன், கிருஷ்ணன், நடராஜன் ஆகியோர் பங்கேற்றனரனர். மகளிர் அணி சார்பில் செயலாளர் லலிதா கணேசன் மற்றும் பொருளாளர் சியாமளா ஆகியோரும் விழாவில் பங்கேற்றனர். திரளான ஆன்மீக அன்பர்களும் சபா உறுப்பினர்களும் கலந்துகொண்ட இந்த நிகழ்வு, மிகுந்த பக்தி உணர்வுடன் நிறைவுற்றது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்