சங்கரமடத்தில் நுாற்றாண்டு குரு பூஜை



ஆர்.கே.பேட்டை: வங்கனுார் சாது சங்கரமடத்தின் நுாற்றாண்டு குருபூஜை விழா துவங்கியுள்ளது.


ஆர்.கே.பேட்டை அடுத்த வங்கனுாரில், செவிண்டியம்மன் கோவில் எதிரே சாது சங்கரமடம் உள்ளது. இந்த மடத்தில் ஆண்டுதோறும் சித்திரை அமாவாசையில் இருந்து, ஐந்து நாட்களுக்கு குருபூஜை விழா நடப்பது வழக்கம். தற்போது, 100வது ஆண்டாக, கடந்த வெள்ளிக்கிழமை முதல் குருபூஜை விழா நடந்து வருகிறது. தினமும் காலை 8:00 மணி மற்றும் மாலை 6:00 மணிக்கு வங்கனுார் சாதுசங்கர பஜனை குழுவினர் இசை நிகழ்ச்சி நடத்தி வருகின்றனர். காலை 10:00 மணிக்கு சிறப்பு வழிபாடு நடக்கிறது. விழாவின் இறுதி நாளான நாளை, ஆந்திர மாநிலம், புத்துார் மற்றும் புதுப்பேட்டையைச் சேர்ந்த சிவனடியார்களின் சிறப்பு சொற்பொழிவு நடைபெற உள்ளது.


பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்