கோவை, மே 16- கோவை ராம்நகர் கோகலே வீதியில் உள்ள ஸ்ரீ முத்துமாரியம்மன் கோயில் 59ம் ஆண்டு சித்திரை மாத திருக்கல்யாணம் உற்சவம் இன்று நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். கடந்த செவ்வாய்க்கிழமை கணபதி ஹோமத்துடன் துவங்கிய விழாவில் அக்கினி கம்பம் நடப்பட்டது. பின்னர் நடந்த திருவிளக்கு பூஜையில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். அம்மன் அழைத்தல், வள்ளி கும்மி, பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடத்தப்பட்டன. மஞ்சள் நீராடல் விழாவுடன் அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார உச்சிகால பூஜை நடத்தப்பட்டு பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டன.