பழநியில் வைகாசி விசாக விழா கொடியேற்றத்துடன் துவக்கம்



பழநி: வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா’ சரண கோஷத்துடன், பழநி பெரியநாயகியம்மன் கோயிலில் ‘வைகாசி விசாகத் திருவிழா’ கொடியேற்றத்துடன் துவங்கியது. 

பழநிகோயில் வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு, பெரியநாயகியம்மன் கோயிலில், ஆறு காலசங்கள் வைத்து, சிறப்பு அபிஷேகம், பூஜைகள், அர்ச்சனைகள் செய்யப்பட்டு, காலை 9.15 மணிக்கு கொடியேற்றம் நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் முத்துகுமாரசுவாமி வள்ளி தெய்வானையுடன் சப்பரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். 

10 நாட்கள் நடக்கும் திருவிழாவில் தினசரி காலை, மாலையில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானை வீதியுலா நடைபெறுகிறது. விழாவின் 6-ம் நாளான 29-ந்தேதி இரவு 7.30 மணிக்கு மேல் பெரியநாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 30-ந்தேதி வைகாசி விசாக நாளன்று பெரிய நாயகி அம்மன் கோவிலில் முத்துக்குமாரசுவாமி வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு வழிபாடுகள் நடக்கிறது. அன்று மாலை 4.30 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெறுகிறது. ஜூன் 2ம்தேதி கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.

பெருமாள் கோயில்களில் பகல் பத்து உற்சவம் துவக்கம்: பகல் பத்து ராப்பத்து என்பது என்ன?

மேலும்

திருப்பாவை பாடல் 28

மேலும்

திருப்பள்ளியெழுச்சி பாடல் 8

மேலும்