திருப்பூர்: திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகிய நால்வரைப் போற்றும் வகையில், திருமுருகன்பூண்டி மாணிக்கவாசகர் தமிழ் அரங்கில் சைவத் திருவிழா நடந்தது.
சங்கத்தமிழ் இலக்கிய பூங்கா எனும் அமைப்பு இந்த நிகழ்ச்சியை நடத்தியது. சைவ சித்தாந்த சபை தலைவர் ஆறுமுகம், மூத்த நிர்வாகிகள் மணிமொழிச்செல்வன், ஈரோடு ராஜாமணி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகப் பங்கேற்றனர்.
முன்னதாக, அமைப்பின் நிர்வாகி காயத்ரி வரவேற்றார். நீலகண்ட தமிழன் தலைமையில் கவியரங்கம், இசையரங்கம், கதையரங்கம் ஆகிய தலைப்புகளில் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன. தொடர்ந்து, பல புதிய நூல்களும் வெளியிடப்பட்டன. விழாவில், தேர்வு செய்யப்பட்ட ஆசிரியர்களுக்குச் சீர்மிகு ஆசிரியர் விருது வழங்கி கவுரவிக்கப்பட்டது. ஏ.வி.பி. பள்ளி ஆசிரியர் சத்தியவதி நன்றி கூறினார்.